Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் அருகே காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரை பொதுமக்கள் மற்றும் பரிசல் ஓட்டிகள் சேர்ந்து 1 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர்.
கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு லேசான பக்கவாதம் ஏற்பட்டதால் மனைவி பிரிந்து சென்றதோடு, பெற்றோரும் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து பள்ளிபாளையம் பழைய பாலம் அருகே இருந்து காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved