Also Watch
Read this
Posted on: Nov 29, 2025 12:43 PM
By: Web Team

தேனி மாவட்டம் கம்பத்தில் செல்போன் கேபிள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இரவில் இருசக்கர வாகன ஓட்டி விழுந்து காயமடைந்த நிலையில், அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கேபிள் பதிக்கும் பணிகள் எல்.எப். மெயின் ரோட்டில் நடைபெற்று வரும் நிலையில், தடுப்பில்லாமல் குழியை தோண்டி போட்டுவிட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் அவர்கள் கலைந்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved