கன்னியாகுமரி மாவட்டம் சங்கரன்புதூர் அருகே நண்பனை வெட்டி கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஈஸ்வரன் மற்றும் அவரது தம்பி பெருமாள் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வந்த நிலையில்,சம்பவத்தன்று மது அருந்தி கொண்டிருந்த ஈஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களை பெருமாள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர் ஈஸ்வரனை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.