Also Watch
Read this
By: Manigandan Raja

விபத்தின் பரபரப்பு காட்சி :
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த இந்திராபுரி அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், காரில் பொருத்தப்பட்டிருந்த டேஷ்கேம் கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் இந்த வீடியோவில், கார் சென்று கொண்டிருக்கும்போதே பைக் திடீரென குறுக்கே வருவதும், மோதிய வேகத்தில்
பைக்கில் வந்தவர் தூக்கி வீசப்படுவதும் பதிவாகியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்தவர்களின் நிலை மற்றும் விபத்திற்கான கூடுதல் காரணங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved