news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்கக் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்கக் கோரிக்கை

வள்ளுவக்குடி, மயிலாடுதுறை

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Myd

ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்கக் கோரிக்கை :

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வள்ளுவகுடியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புங்கனூர் கொண்டல் வள்ளுவகுடி நிம்மேலி ஆதமங்கலம் பெருமங்கலம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் தடுப்பூசி மற்றும் பொது மருத்துவம் என 24 மணி நேரமும் மருத்துவர்களுடன் இயங்கி வந்த இந்த ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்த நிலையில்
செயல்பட்டு வந்ததால் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை.

மனுக்கள் அளிக்கப்பட்டு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு திறப்பதற்கு தயாராக இருந்த நிலையில் தனிநபர் ஒருவர் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள கரிக்குளம் நீர்நிலை பொறம்போக்கில் கட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில்.

நீதிமன்றத்தில் இந்த புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை இடிக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. தகவல் தெரிந்த கிராம மக்கள் கொண்டல் சீர்காழி சாலையில் இரண்டு முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டு னர்.அப்போது புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார
நிலையம் விரைவில் திறக்கப்படும் என கூறியதால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நிலையில் நேற்று ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள சித்த மருத்துவ பிரிவில் பழைய பொருட்களை ஏற்றுவதற்காக வந்தாக கூறப்படும் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை இடிப்பதை கைவிட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி லாரியை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை கோட்டாட்சியர் சுரேஷ் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் ஆய்வாளர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் பொதுமக்கள் 200 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். அதன் பிறகு
சிறைபிடிக்கப்பட்ட லாரி போலீஸார் பாதுகாப்புடன் எடுத்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Link
மதுபோதையில் கல்லூரி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

மதுபோதையில் கல்லூரி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
4 hrs 11 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved