news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுபோதையில் கல்லூரி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்
tv

Also Watch

tv

Read this

மதுபோதையில் கல்லூரி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

நெல்லை

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL Kudankulam

மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் :

நெல்லை அருகே குடிபோதையில் கல்லூரி பேருந்து ஓட்டுநர் ஏற்படுத்திய கோர விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடி வந்த 10-ஆம் வகுப்பு மாணவி செல்வ பாலா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான மருத்துவக் காரணங்கள் குறித்து மருத்துவர்கள் அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மருத்துவர்களின் மருத்துவ விளக்கம்: மாணவி செல்வ பாலாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், "மாணவி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போதே மிகவும் கவலைக்கிடமான நிலையில் (Critical Condition) இருந்தார்.

அவருக்கு தலையில் பலத்த காயம் (Severe Head Injury) ஏற்பட்டிருந்தது. குறிப்பாக, அவரது மூளைப் பகுதி முழுவதுமே ரத்தக் கசிவு (Brain Bleed) ஏற்பட்டிருந்தது. மருத்துவ ரீதியாக இதனை 'இன்ட்ராவென்ட்ரிகுலர் ஹெமரேஜ்' (Intraventricular Hemorrhage - IVH) என்று அழைப்போம். மூளையின் உட்புற அறைகளில் ரத்தம் கசிந்து நிறைந்திருந்ததால், அவரை மீட்கும் முயற்சி சவாலாக
இருந்தது," என்று தெரிவித்தனர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:
விபத்து நடந்த முதல் நாளில் இருந்தே மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த போதிலும், கடந்த இரண்டு நாட்களாக ஒரு சிறிய முன்னேற்றம் (Improvement) தெரிந்தது.

ஆனால், மூளையில் ஏற்பட்ட பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்ததால்,இன்று அதிகாலை மாணவியின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Link
சத்திரக்குடியில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து

சத்திரக்குடியில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
4 hrs 55 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved