Also Watch
Read this
Posted on: Nov 29, 2025 12:39 PM
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். ஜெ.ஜெ. ரவி நகரில் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த மாணவியை பைக்கில் பின்தொடர்ந்த இளைஞர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இளைஞர் வீரகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், சென்னை தனியார் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved