news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கூவம் ஆற்றில் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகள்
tv

Also Watch

கூவம் ஆற்றில் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகள்

பிஞ்சிவாக்கம், திருவள்ளூர்

57

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Silai

திருவள்ளூர் அடுத்த பிஞ்சிவாக்கம் கிராம வழியாக செல்லும் கூவம் ஆற்றங்கரையோரம் அதிகாலையில் அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்றபோது ஆற்றில் சாமி சிலை
இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் அருகே சென்று பார்த்தபோது 10க்கும் மேற்பட்ட சிலைகள் இருப்பதைக் கண்ட அவர் கிராமத்தினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் கிராம மக்கள் கூவம் ஆற்றில் குவிந்தனர்
மேலும் ஆற்றில் இறங்கி தேடத் தொடங்கிய போது அங்கு ஐயப்பன் முருகன் விநாயகர் பைரவர் நாரதர் நாகம்மாள் அம்மன் வாசுகிநாகம் உள்ளிட்ட 50 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டு அப்பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டது.

பின்னர் தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் சில சிலைகள் சேதமடைந்தகாணப்படுவதாலும் ஒரே இடத்தில் 50க்கும் மேற்பட்ட சிலைகள் இருப்பதாலும் இவற்றை யாரேனும் எடுத்து வந்து இங்கு போட்டார்களா அல்லது ஆற்று நீரில் அடித்து வரப்பட்டவையா என்பது குறித்து
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே பிஞ்சுவாக்கம் கூவ ஆற்றில் கண்டறியப்பட்ட சிவன் சிலையை அரசு அதிகாரிகள் எடுத்துச் சென்று பக்கத்து கொடுத்தனர் தற்பொழுது அந்த சிலை பக்கத்து கிராம மக்களால் வழிபட்டு வரப்படுகிறது ஆனால் இந்த முறை எங்களுக்கு கிடைத்திருக்கும் சிலைகளை அரசிடம் ஒப்படைக்க மாட்டோம் நாங்களே எங்கள் கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து வழிபட உள்ளதாகவும் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் :  இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் 3 காவலர்கள் காயம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved