Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே அரசு நிகழ்ச்சியில் பங்கேற்காத பேரூராட்சி பெண் அலுவலரை கடிந்து கொண்ட பர்கூர் சட்டமன்ற உறுப்பினர், மக்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
அம்பேத்கர் நகர் பகுதியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாயக்கூடம் மறுசீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற எம்எல்ஏ மதியழகனை சூழ்ந்து கொண்டு, அப்பகுதி மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். அப்போது பேரூராட்சி அலுவலரை தேடிய எம்எல்ஏ, அவருக்கு போன் செய்து கண்டித்தது மட்டுமல்லாமல் நேரடியாக வர அறிவுறுத்தினார்.
இதையும் படியுங்கள் : ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சலசலப்பு..!