news-tamil-logo

3/16/2026, 3:29:46 AM

news-tamil-logo
more
Home districtnews 5 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

5 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

தாம்பரம், செங்கல்பட்டு

Posted on: Feb 04, 2026 01:51 PM

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
GST Road accident

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் ஜிஎஸ்டி சாலையில் வண்டலூர் பேருந்து நிலையம் உள்ளது இதில் பயணிகளை ஏற்றுவதற்காக சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென நின்றதால் பின்னால் வந்த கார் பிரேக் பிடித்து நின்றுள்ளது.

பின்னால் வந்த இருசக்கர வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் கார் பின்னால் மோதிய நிலையில் அதன் பின்னால் வந்த மற்றொரு கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருசக்கர வாகனம் காருக்கு அடியில் சென்று அப்பளம் போல் நொறுங்கியது.

அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் காரின் அடியில் சிக்காமல் வெளியில் விழுந்ததால் சிறு காயங்களுடன் உயர்த்தப்பினார் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துக் காவல்துறையினர் இருசக்கர வாகன ஓட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜிஎஸ்டி சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதன் காரணமாக காரணமாக பெருங்களத்தூர் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கார் மற்றும் இருசக்கர வாகனங்களை மீட்டு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Link
லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவையின் ஜல்லிக்கட்டு போட்டி

லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவையின் ஜல்லிக்கட்டு போட்டி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
12 hrs 59 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved