news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews உச்சநீதிமன்ற ஆணையின் படி டெட் தேர்வு கட்டாயம்
tv

Also Watch

tv

Read this

உச்சநீதிமன்ற ஆணையின் படி டெட் தேர்வு கட்டாயம்

செளகார்பேட்டை, சென்னை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்

சென்னை செளகார்பேட்டையில் உள்ள ஸ்ரீ பிஎஸ்எஸ் ஜெயின் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மற்றும் இணை இயக்குனர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மேலும் மாணவ மாணவிகளிடையே கல்வித் திறன் வளர்த்தல், தாழ்வு மனப்பான்மை கைவிடுதல், பள்ளி தேர்வு கால கட்டங்களில் தேர்வை அச்சமின்றி எவ்வாறு எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது : 

டெட் தேர்வு கட்டாயமாக்கல் அரசிதழில் வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு,உச்சநீதிமன்ற ஆணையின் படி டெட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கால அவகாசம் இரண்டு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.


இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஆர்டிஐ என்பது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற கட்டாயமாக உள்ளது.

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம்.நடுநிலை பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம். அதற்கான கால அவகாசத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் தொடர்ந்து டெட் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Related Link
பல்கலை. வேந்தர் முதலமைச்சர் தான் - அன்புமணி திட்டவட்டம்

பல்கலை. வேந்தர் முதலமைச்சர் தான் - அன்புமணி திட்டவட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரீல்ஸ் மோகத்தால் தங்க நகைகளை பறிகொடுத்த பெண்

5
10 mins agoshare
ரீல்ஸ் மோகத்தால் தங்க நகைகளை பறிகொடுத்த பெண்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved