Also Watch
Read this
By: Web Team

நடிகர் ரவி மோகனின் சொத்துக்களை முடக்க, பட தயாரிப்பு நிறுவனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திரைப்படத்தில் நடிப்பதற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன் பணத்தை திருப்பித் தர, நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக்கோரி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 5 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான சொத்து உத்தரவாதத்தை ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று பட தயாரிப்பு நிறுவனம் சார்பில், நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், நீதிமன்ற உத்தரவின்படி, நடிகர் ரவி மோகன், சொத்து உத்தரவாதத்தை தாக்கல் செய்யவில்லை என்பதால், அவரது சொத்துக்களை முடக்க உத்தரவிட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, இந்த கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யுமாறு பட நிறுவனத்துக்கு அனுமதி வழங்கினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved