Also Watch
Read this
Posted on: Nov 29, 2025 03:38 PM
By: Web Team

டிட்வா புயல் காரணமாக, காசிமேடு வார்ப்பு பகுதியில் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புயல் வேகமாக நகர்ந்து வருவதால், சென்னை கடலோர பகுதிகளான காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, காசிமேடு பகுதியில் ஆக்ரோஷமான அலைகள் எழும்பி வார்ப்பு பகுதியில் விழுகிறது. எனவே, அப்பகுதியில் போலீஸார் தடுப்பு அமைத்து, பொழுது போக்குக்காக வரும் பொதுமக்கள் மற்றும் செல்ஃபி எடுக்க வரும் இளைஞர்களை தடுத்து நிறுத்தி வெளியேற்றி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved