வங்கி லாக்கரில் வைப்பதற்காக எடுத்துச் சென்ற நகைகளை, இரண்டு மர்மநபர்கள் வழிப்பறி செய்துவிட்டதாக அழுது கூப்பாடுபோட்டு பதற்றத்துடன் புகார் அளித்த இளம்பெண். சிசிடிவி காட்சிகளை அலசி ஆராய்ந்தபோது வழிப்பறி நடந்ததற்காக தடயமே இல்லாததால், போலீசார் குழப்பம். கடைசியில் புகார் அளித்த இளம்பெண்ணே நகைகள் திருடுபோனதாக நாடகம் ஆடியது அம்பலம். இளம்பெண்ணே தனது நகைகள் திருடு போனதாக நாடகமாடியது ஏன்? அதற்கான காரணம் என்ன? இளம்பெண்ணின் குட்டு வெளிவந்தது எப்படி?தனது நகைகளை வழிப்பறி செய்ததாக அழுத இளம்பெண்சார், என்னை மிரட்டி 25 சவரன் நகைய வழிப்பறி பண்ணிட்டாங்கனு அழுதுக்கிட்டே ஒரு இளம்பெண், போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்ப்ளைண்ட் குடுக்க வந்துருக்காங்க. அழுத அந்த பொண்ணை அமைதிப்படுத்தி விசாரணை நடத்திருக்காங்க. அப்போ, எந்த இடத்துல வழிப்பறி நடந்தது? எப்படி நடந்தனு எல்லாத்தையும் அந்த பொண்ணு சொன்னதும் சம்பவம் நடந்த இடங்கள்ல இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை செக் பண்ணிருக்காங்க போலீசார். ஆனா, அந்த இளம்பெண் சொன்ன நேரத்துல, சொன்ன இடத்துல, அப்படி எந்த வழிப்பறியுமே நடந்ததுக்கான தடயமே இல்ல. அதனால, போலீசாருக்கு குழப்பமா இருந்துருக்கு. அதோட, இளம்பெண்கிட்ட கேள்விகளை துருவித்துருவி கேட்ருக்காங்க. அந்த கேள்விகளை சமாளிக்க முடியாம திணறுன அந்த இளம்பெண் ஒருகட்டத்துல அவங்களே சில விஷயங்கள சொல்லிருக்காங்க. அது, போலீசாருக்கே ஷாக் தான். Related Link முந்திரி விவசாயிக்கு தீவைப்பு 35 சவரன் நகைகளுடன் வங்கிக்கு சென்ற ஹமீதா ஃபரோஸ்திருவாரூர், குடவாசல் பக்கத்துல உள்ள எரவாஞ்சேரி புது தெருவை சேர்ந்தவர்தான் ரிலுவானுதீன். இவரு வெளிநாட்டுல வேலை பாத்துட்டு இருக்காரு. இவரோட 30 வயசான மனைவி ஹமீதா ஃபரோஸ் தன்னோட மாமியார், மாமனார், கணவருக்கு தெரியாம ஒரு உறவினருக்கு பணம் குடுக்க நினைச்சிருக்காங்க. அந்த பணத்தை எதிர்காலத்துல தனக்குனு ஒரு சேமிப்பா வச்சிக்கலாம்னு முடிவு பண்ணிருக்காங்க. அதுக்கு அவங்க தேர்ந்தெடுத்த வழிதான் வழிப்பறி நாடகம். தங்கம் விக்கிற விலையில இனிமேல் நகைகள் வீட்ல இருக்குறது பாதுகாப்பு இல்ல, அதனால பேங்க் லாக்கர்லபோய் வச்சிட்டு வர்றதா மாமியார்கிட்ட சொல்லிட்டு வீட்டவிட்டு கிளம்பிருக்காங்க ஹமீதா. மருமகள் சொல்றது உண்மைதான், கொள்ளை சம்பவங்கள் அதிகமா நடக்கதான் செய்யுதுனு சொன்ன மாமியாரும் லாக்கர்ல வச்சிட்டு வானு சொல்லிருக்காங்க. அதனால, தன்கிட்ட இருந்த 35 சவரன் நகைகளை எடுத்துக்கிட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எரவாஞ்சேரி கிளைக்கு போய்ருக்காங்க. ஆனா, நகைகளை லாக்கர்ல வைக்காம அங்க இருந்து கிளம்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்ட்டாங்க ஹமீதா. வங்கியில் அமர்ந்துவிட்டு ஹமீதா உடனே கிளம்பிய சிசிடிவி காட்சிவங்கி லாக்கர்ல வைக்கிறதுக்காக ரெண்டு பேக்ல 60 சவரன் நகைகளை கொண்டு போனதாகவும், அதுல 25 சவரன் நகைகள் இருந்த பேக்கை தன்னோட ஸ்கூட்டிய வழிமறிச்சி ரெண்டு மர்மநபர்கள் மிரட்டி வழிப்பறி பண்ணிட்டதாகவும் அழுதுருக்காங்க. பிள்ளையார்கோவில் பக்கத்துல வழிப்பறி நடந்ததாகவும் சொல்லிருக்காங்க. அதுக்குப்பிறகு, வழக்குப்பதிவு பண்ண போலீசார் பிள்ளையார்கோவில் பக்கத்துல உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு பண்ணிருக்காங்க. அதுல, வழிப்பறி நடந்த வீடியோ எதுவுமே இல்ல, அதோட அந்த பொண்ணு ஸ்கூட்டியை பிள்ளையார்கோவில் பக்கத்துல நிறுத்துன காட்சியும் இல்லை. அதுக்குப்பிறகு இளம்பெண்ணோட ஸ்கூட்டி எந்த பக்கம் போயிருக்குதுனு பாத்துருக்காங்க. அதுல, பேங்குக்கு போறதும், உள்ளபோய் கொஞ்சநேரம் வெயிட் பண்ணிட்டு திரும்பவும் ஸ்கூட்டியில கிளம்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு வர காட்சியும்தான் இருந்துருக்குது. அதனால, சந்தேகமடைஞ்ச போலீசார் வங்கியில விசாரிச்சிருக்காங்க. அப்போ, ஹமீதா நகைகளை லாக்கர்ல வைக்க வந்ததா சொன்னாங்க, அடுத்து கூட்டமா இருக்குது, அதனால நாளை வந்து லாக்கர்ல வச்சிக்கிறேனு சொல்லிட்டு கிளம்பிட்டதாக சொல்லிருக்காங்க வங்கி ஊழியர்கள்.ஹமீதா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்இப்படி எல்லாமே ஹமீதா மேல போலீசாருக்கு சந்தேகத்தை அதிகமாக்கிருக்குது. அடுத்து, இளம்பெண்கிட்டயே கேள்விக்குமேல கேட்ருக்காங்க போலீசார். அப்பதான், உண்மைய சொல்லிருக்காங்க ஹமீதா. 35 சவரன் நகைகள் மட்டும்தான் வீட்ல இருந்து எடுத்துட்டு வந்ததா சொன்ன இளம்பெண், அந்த 35 சவரனுமே தன்கிட்டதான் இருக்குறதாகவும், நகைகளை வேற வங்கியில அடகுவச்சி அந்த பணத்தை தன் கணவருக்கும், மாமியாருக்கும் தெரியாம உறவுக்காரருக்கு கொடுக்க நினைச்சதா சொல்லிருக்காங்க. நகைகளை வழிப்பறி பண்ணிட்டாங்கனு சொல்லிட்டா அதபத்தி யாருமே எதுவுமே கேக்கமாட்டாங்கனும் சொல்லிருக்காங்க. இல்லாத 25 சவரன் நகைகளை வழிப்பறி செஞ்சிட்டதா நாடகமாடுன ஹமீதாவோட சாயம் கடைசியில வெளிறிருச்சு. போலி கம்ப்ளைண்ட் குடுத்து காவல்துறையோட நேரத்த வீணாக்குனதால ஹமீதாமேலதான் வழக்கு பாஞ்சிருக்குது. Related Link இருளில் மூழ்கடிக்கப்பட்ட இருளர் இன மக்கள்