news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றபோது விபத்து
tv

Also Watch

tv

Read this

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றபோது விபத்து

அருப்புக்கோட்டை, விருதுநகர்

33

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VDN

பாதயாத்திரை சென்றபோது விபத்து :

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரை சென்று வருகின்றனர்.

இந்நிலையில் காரியாபட்டி அருகே கழுவனச்சேரியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் சடையகருப்பன்(35) மற்றும் முத்துப்பாண்டி(35) அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது செட்டிகுறிச்சி விலக்கு அருகே பின்னால் கோயம்புத்தூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சடையகருப்பன்(35) மற்றும் முத்துப்பாண்டி(35) மீது மோதி இருவர் தூக்கி வீசப்பட்டு சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பந்தல்குடி காவல் நிலைய போலீசார் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு அருப்புக்கோட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கார் ஓட்டுநர் ராமநாதபுரத்தை சேர்ந்த இளம்பாரதி என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
திருப்பூரில் பேருந்து வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூரில் பேருந்து வராததால் பொதுமக்கள் சாலை மறியல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
3 hrs 16 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved