news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருப்பூரில் பேருந்து வராததால் பொதுமக்கள் சாலை மறியல்
tv

Also Watch

tv

Read this

திருப்பூரில் பேருந்து வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர்

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR Salai mariyal

பொதுமக்கள் சாலை மறியல் :

திருப்பூர் கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று சுப முகூர்த்த தினம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள காலை முதல் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

ஆனால் தேனி செல்லும் பேருந்து அதிகாலை முதல் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது நான்கு மணி நேரத்திற்கு மேலாக தேனி பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் பேருந்து வராததால் ஆத்திரம் அடைந்து கோவில்வழி பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தேனி பேருந்துகள் உடனடியாக வர நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

போக்குவரத்து துறை அதிகாரிகள் உடன் பேசிய போலீசார் பேருந்துகளை வரவழைத்து பொதுமக்களை அனுப்பி வைத்தனர். இந்த போராட்டம் காரணமாக கோவில் வழி பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Related Link
வீடு வீடாக பிரச்சாரத்தை துவங்கிய தவெக

வீடு வீடாக பிரச்சாரத்தை துவங்கிய தவெக


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

2
10 hrs 41 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved