சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காளிராஜூக்கு எதிரான சொத்துகுவிப்பு புகாரை ஆறு மாதங்களில் விசாரித்து முடிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழத்தில் துணைவேந்தராக பணியாற்றி வந்த காளிராஜூ, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் மாணிக்கம் என்பவர் கடந்த ஜூலை மாதம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், புகார் குறித்து இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும், முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியும் அவர், மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சேஷசாயி முன்பு வந்தது. அப்போது, மனுதாரரின் புகார் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.