Also Watch
Read this
By: Manigandan Raja

கவுன்சிலருடன் வாக்குவாதம் :
ஈரோடு சிக்கய்ய அரசு கல்லூரியில் நூலகம் மற்றும் குடிமைப் பணிகள் பயிற்சி மைய திறப்பு விழா இன்று நடைபெற்றது அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் ஈரோடு எம் ஜி ஆர் நகர் பகுதியில் வசிக்கும் 60 குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயனாளிகளுக்கு மட்டுமே பட்டா வழங்க அதிகாரிகள் பரிந்துரை செய்திருந்தனர். இதில் பத்து பயனாளிகள் கடந்த 30 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்தும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை எனவும்.
இன்றும் அதே நிலை தொடர்வதாக கூறி 6 வார்டு திமுக கவுன்சிலர் பிரியனை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு விழாவில் நடைபெற்ற பொதுமக்களின் இந்த வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக அமைச்சர் தலையிட்டு 15 நாட்களுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்.
இது தொடர்பாக ஏன் என்னிடம் புகார் தரவில்லை என கவுன்சிலருக்கும் டோஸ் விட்ட அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறவே பொதுமக்கள் வாக்குவாதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved