சென்னை நந்தம்பாக்கத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகர் பெண்களுடன் சேர்ந்து ஒரு பெண் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நந்தம்பாக்கம் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த லலிதா என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பர்மா கண்ணன், அவ்வை ரம்யா ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.