news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திமுக இனி எழுந்திருக்கவே கூடாது என முதல்வர் விஜய் ஆவேசம்
tv

Also Watch

tv

Read this

திமுக இனி எழுந்திருக்கவே கூடாது என முதல்வர் விஜய் ஆவேசம்

வெளுத்து வாங்கி விடுங்கள்...

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இனி எந்தக் காலத்திலும், திமுக எழுந்திருக்கவே முடியாத பதிலடியை கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் பேசி உள்ளார். வரும் இடைத்தேர்தலில் நன்றாக வைத்து வெளுத்து விடுமாறும் கரூர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கரூரில் முதல்வர் விஜய்
கரூரில் முதல்வர் விஜய் பேசியதாவது;
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவு உயரங்களுக்குச் சென்றாலும், சில காயங்களை, வலியை மறக்க முடியாது. எனக்கு அனைத்தையும்விட வலியும், காயமும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம் தான். பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என காவல்துறை கூறியது. நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல் துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்?

நிரந்தர பதிலடி தர வேண்டும்
நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்துவிட்டது காவல்துறை தான், இப்படி நடந்தால் அப்படி செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படி செய்யுங்கள் எனக்கூறி பிரஷர் போட்டது யார்? கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் செய்தனர். நம் எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது மட்டும் போதாது மக்களே, எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஜனம் தான் முக்கியம்
என் அக்கா, தங்கைகளை இழந்திருக்கிறேன். வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் எனக் கூறுவதா? நான் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதி அல்ல. வாய் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? பணமா, ஜனமா எனக் கேட்டால், எனக்கு ஜனம்தான் முக்கியம். விஜய் ஒவ்வொரு கதையாக எடுத்து வெளியே விடுவார் போல எனக் கதறுகிறார்கள்.
விஜய் ஏன் அதைப் பற்றி பேசவில்லை, இதைப் பற்றி பேசவில்லை என்கிறார்கள்.

குற்றம் உள்ள நெஞ்சுதான்...
பாட்டுக்கு பாட்டு கச்சேரி பண்ண எங்களுக்கும் தெரியும். பண்ணலாமா? என்னை பேசு பேசு என்று சொல்கிறார்கள். ஆனால், பேச ஆரம்பித்தால் வெளியே சென்றுவிடுகிறார்கள். ‘பார்ட்டி ஃபண்ட்’ என்று சொன்னவுடன் சட்டப்பேரவையில் இருந்து ஓடிவிட்டார்கள். யார், எந்த கட்சி என்று கூட சொல்லவில்லை, அவர்கள் ஓடிவிட்டனர். ‘என் அப்பா பீரோவுக்குள் இல்லை’ என சொல்கிறார்கள். இவர்களுடன் ஒரே கூத்தாக உள்ளது. ‘குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும்’.
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

Related Link
திமுக, அதிமுகவுக்கு முதலமைச்சர் விஜய் சவால்

திமுக, அதிமுகவுக்கு முதலமைச்சர் விஜய் சவால்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

0
8 mins agoshare
news image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau