news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திமுக, அதிமுகவுக்கு முதலமைச்சர் விஜய் சவால்
tv

Also Watch

tv

Read this

திமுக, அதிமுகவுக்கு முதலமைச்சர் விஜய் சவால்

திமுக, அதிமுக கூட்டுக் களவாணிகள்...

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் கூட்டுக் களவாணிகள் என திமுக, அதிமுகவை விமர்சித்த முதலமைச்சர் விஜய், முடிந்தால் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என வரும் இடைத்தேர்தலில் நிரூபித்துக் காட்டுமாறு சவால் விடுத்துள்ளார்.

கொளத்தூரில் கொத்து புரோட்டா
கரூரில், முதல்வர் விஜய் பேசியதாவது;
ஐந்து நிமிடம் பேசியதற்கே, கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டார்கள். இதுக்கும் மேல் பேசினால் மொத்தமாக முடிந்துவிடும். பேசி, பேசி பிரச்சினையை வளர்த்துக் கொண்டு, பிறர் மீது பழியை போட்டுவிட்டு, மக்களை தெருவில் அம்போ என விடும் அரசியல் எனக்குத் தேவையில்லை, செய்யப்போவதும் இல்லை. ‘டாக் லெஸ், வொர்க் மோர்’ இது தான் நமது பாலிசி.

ஊழல், லஞ்சம் இல்லை
கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கே இருக்கிறார்? என தெரியவில்லை. ஓடு ஓடுனு ஓடிக்கிட்டே இருக்கிறார். இன்னொருவர் வெளிநாட்டில் செக்கப்-க்கு சென்றுவிட்டார். தவெக ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் வேலை டக் டக் என நடக்கிறது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை கிடைக்கிறது. ஊழல், லஞ்சம் இல்லை என மக்கள் கூறியதை கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

வெண்டிங்மிஷினே திமுக தான்
தீயசக்தி இப்போது யார் கதவை தட்டிக்கொண்டு நிற்கிறது என்பது மக்களுக்கே தெரியும். தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் கிடையாது, கூட்டுக் களவாணிகள். அவர்கள் எங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என நிரூபிக்க முடியுமா? நம்ம ஆட்சி அமைந்ததில் இருந்து என்னென்னவோ சொல்கிறார்கள். சோஃபா ஆட்சி, வாஷிங் மெஷின் ஆட்சி என்றெல்லாம் சொல்கிறார்கள். அரசியல் வியாபாரம் செய்வதற்கான வெண்டிங் மெஷினே திமுகதான். வர இருக்கும் இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை வெளுத்து விடுங்கள்

நினைவுச்சின்னம் அமைக்கப்படும்
உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் தர முடியாது எனக் கூறுங்கள். நான் இருக்கிறேன் உங்களுடன். அண்ணா பிறந்தநாளன்று தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்பட உள்ளது. நான் கரூருக்கு வரக் கூடாது என கட்டுப்பாடு போட பார்த்தனர். இது திமுக ஆட்சி இல்லை. நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிரான சதியை, சூழ்ச்சியை இனி வரும், தலைமுறைக்கு தெரியப்படுத்த கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

Related Link
நேற்று கிண்டல், இன்று வாபஸ், என்ன சொல்கிறார் வைகோ?

நேற்று கிண்டல், இன்று வாபஸ், என்ன சொல்கிறார் வைகோ?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

0
6 mins agoshare
news image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau