news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முதலமைச்சர் மரியாதை
tv

Also Watch

tv

Read this

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முதலமைச்சர் மரியாதை

சென்னை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cm

நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சிவாஜி கணேசனின் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாளையொட்டி, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிலை மற்றும் உருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து அமைச்சர்கள், கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தினர். அப்போது ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.


இதனை அடுத்து, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த திரைப்படக் காட்சிகள் அங்கு திரையிடப்பட்டன. மணி மண்டபத்தில் இருந்த புகைப்படங்களை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சிவாஜி கணேசனின் திரைப்பட காட்சிகளையும் பார்வையிட்டார். 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வாகனம்

4
7 hrs 8 mins agoshare
School van fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau