news-tamil-logo

3/15/2026, 11:09:38 PM

news-tamil-logo
more
Home districtnews பர்கூர் அருகே கள் விற்பனை என புகார்
tv

Also Watch

tv

Read this

பர்கூர் அருகே கள் விற்பனை என புகார்

பர்கூர், கிருஷ்ணகிரி

Posted on: Feb 04, 2026 02:13 PM

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KSG KAL Virpanai

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே நவீன முறையில் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் சட்டவிரோதமாக கள்ளு விற்பனை செய்த தம்பதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பர்கூர் அடுத்த கந்திகுப்பம் அருகே உள்ள காத்தாடி குப்பம் கிராமத்தில், பனைமரங்களில் இருந்து கள்ளு இறக்கி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக, போலீசாரிடம் சிக்காமல் இருக்க போன் பே (PhonePe) ஸ்கேனர் மூலம் பணம் பெற்றுக்கொண்டு கள்ளு விற்பனை செய்த அதிர்ச்சி தகவல் நியூஸ் தமிழ் 24x7 தொலைக்காட்சியில் பிரத்யேக செய்தியாக வெளியானது.

இந்த செய்தி வெளியானதை அடுத்து, மாவட்ட காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து மதுவிலக்கு போலீசார் கந்திகுப்பம் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கைது நடவடிக்கை: சோதனையில், மத்தூர் அடுத்த மாடர அள்ளி அருகே உள்ள கூச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி தேன்மொழி ஆகிய இருவரும் கள்ளு
விற்பனையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

சிறை தண்டனை: இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பொதுமக்களுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் ரசாயனம் கலந்த கள்ளு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நியூஸ் தமிழ் வெளியிட்ட செய்தியால் இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Link
தலைமை காவலரின் மனைவியிடம் நான்கு பவுன் செயின் பறிப்பு

தலைமை காவலரின் மனைவியிடம் நான்கு பவுன் செயின் பறிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
8 hrs 39 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved