news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக புகார் இரவு சாலை மறியலில்
tv

Also Watch

tv

Read this

தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக புகார் இரவு சாலை மறியலில்

சென்னை, திருவொற்றியூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருவொற்றியூர் தொடர் மின்வெட்டு

மின்வெட்டு ஏற்படுவதாக புகார் இரவு சாலை மறியலில் :

திருவொற்றியூர்  தெற்கு மாட வீதி பகுதி அண்ணா காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கடந்த பத்து நாட்களாக அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு மின்சார வாரிய ஊழியர்கள் தற்காலிகமாக சரி செய்து உள்ளனர்.

நேற்று திடீரென உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது இதன் காரணமாக வீடுகளில் உள்ள டிவி உள்ளிட்ட பொருட்கள் பழுதாகி உள்ளதாக கூறப்படுகிறது இது சம்பந்தமாக மின்சார வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்துடன் பதில் அளித்ததாலும் இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டுமென்றால் புதிய கேபிள் அமைக்க வேண்டும் அந்த கேபிள் நீங்கள் தான் வாங்க பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தெற்கு மாட வீதி பிரதான சாலையில் பேருந்துகளை மறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த மண்டல குழு தலைவர் திமு தனியரசு மற்றும் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் அலெக்ஸ் தலைமையிலான காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் உடனடியாக மின்சார வாரிய உயர் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.

உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் புதிய கேபிள் உடன் வந்து பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர் பொதுமக்கள் சாலை மறியல் காரணமாக அரை மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Link
சாவாரப்பட்டி கல்குவாரி முன்பு பொதுமக்கள் முற்றுகை

சாவாரப்பட்டி கல்குவாரி முன்பு பொதுமக்கள் முற்றுகை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக புகார் இரவு சாலை மறியலில்

0
2 hrs 0 min agoshare
திருவொற்றியூர் தொடர் மின்வெட்டு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved