news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விஜய் ஜாக்பாட் வாக்குறுதிகள் - யாருக்கு என்னென்ன அஜெண்டா?
tv

Also Watch

tv

Read this

விஜய் ஜாக்பாட் வாக்குறுதிகள் - யாருக்கு என்னென்ன அஜெண்டா?

தேர்தல் அறிக்கை முழு விவரம்

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

புதிதாக தேர்தலை சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய், மகளிருக்கு மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

தவெக தேர்தல் வாக்குறுதிகள்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் 6 விலையில்லா கேஸ் சிலிண்டர் வழங்கப்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதி உதவி உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்த விஜய், 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுக்கான ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார்.

தவெக அளித்துள்ள வாக்குறுதிகள்;

* 60 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் மாதம் ரூ.2,500''
* ஆண்டுதோறும் 6 விலையில்லா கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்'
* ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 1 சவரன் தங்கம், பட்டுச் சேலை வழங்கப்படும்'
* அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு நிதியுதவி
* குழந்தைகளின் தாய்மார்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.15,000 செலுத்தப்படும்

* இடை நிற்றலை தவிர்க்க அரசு, அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு நிதி
* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும்
* சிறப்பு தரம் கொண்ட 100 காமராஜர் பள்ளிகள் உருவாக்கப்படும்
* அனைத்து மாவட்டங்களிலும் தரமான கல்வியை வழங்கும் இலவச உறைவிட பள்ளிகள்

* இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை பயில ரூ.20 லட்சம் பிணையில்லா கடன் உத்தரவாதம்
* AI மூலம் இயங்கும் இலவச போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்
* போதை இல்லா தமிழகம், கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு மன்றங்கள் உருவாக்கம்
* ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் வரை UNIVERSAL HEALTH INSURANCE''

* புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம்
* ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச வருடாந்திர பரிசோதனை, மலிவு விலை மருந்து
* வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலையில்லாத பட்டதாரிக்கு மாதம் ரூ.4,000
* 12ஆம் வகுப்பு, ITI படித்தவர்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும்


* ஆண்டு தோறும் 5 லட்சம் இண்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படும்
* பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.10,000 - டிப்ளமோ, ITI படித்தவர்களுக்கு ரூ.8,000 வழங்கப்படும்
* தொழில் முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு ரூ.25 லட்சம் வரை பிணையில்லா கடன்
* அரசு தேர்வுகளுக்கு நிலையான ஆட்சேர்ப்பு கால அட்டவணை உருவாக்கப்படும்

* 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி'
* 5 ஏக்கருக்கும் அதிகமான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர் கடன் 50% தள்ளுபடி
* குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 விலை, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 விலை நிர்ணயம்
* குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000

* 5 லட்சம் இலவச சோலார் பம்ப் செட்டுகள் வழங்கல் - 100 சதவீதம் பயிர் காப்பீடு
* மீன் பிடி தடைகால நிவாரணமாக ரூ.27,000 வழங்கப்படும்
* பதிவு செய்த ஒவ்வொரு மீனவருக்கும் ரூ.25 லட்சம் விபத்து காப்பீடு
* முதன்முதலாக மீன்களுக்கு என குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்
* அனைத்து மீனவர்களுக்கும் நிரந்தர வீடுகள் கட்டித் தரும் லட்சிய திட்டம்

* முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள் ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயர்த்தப்படும்
* ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்
* அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் வசதி உறுதி செய்யப்படும்
* அரசு ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு பழைய ஓய்வூதிய திட்டம் பரிசீலிக்கப்படும்


* 5 ஆண்டுக்கு மேல் அனுபவம் கொண்ட பணியாளர்களுக்கு பணி முறைப்படுத்துதல்
* தற்காலிக ஆசிரியர்கள், செவிலியர்கள், எழுத்தர்கள் ஆகியோர் பணியை முறைப்படுத்துதல்
* அங்கன்வாடி ஊழியர்கள் ஊதியம் ரூ.18,000, சுகாதார உதவியாளர் ஊதியம் ரூ.10,000

* 20 வருட சேவைக்கு பிறகு ரூ.15 லட்சத்திற்கு ஓய்வூதிய கருணைத் தொகை உத்தரவாதம்'
* 5 வருட அனுபவம் கொண்ட ஒப்பந்த ஆசிரியர்களுக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் வழங்கல்
* 2036ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி நகருவோம்

* MSME நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலான மேம்பாட்டு நிதி வழங்கப்படும்
* இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சகம், பல்கலைக்கழகம் அமைக்கப்படும்
* 21 நாட்களுக்குள் வணிக உரிம உத்தரவாதம் & முதலீட்டிற்கு சிறப்புக் கொள்கை உருவாக்கம்
* ரேஷன் உள்ளிட்ட அரசு திட்டங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து வழங்கப்படும்

* ஒவ்வொரு அரசு சேவையும் காலக்கெடுவுக்குள் வழங்கப்படும்
* பொதுமக்கள் நேரடியாக எழுப்பும் பிரச்சனைகளை விவாதிக்க, பேரவையில் சிறப்பு நாள்
* மாவட்ட நிதி ஒதுக்கீட்டில் 10% செலவினங்களை மக்கள் விருப்பப்படி தீர்மானிக்கலாம்
இவ்வாறு தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

Related Link
விசில் அடிக்கலாம், நாட்டை  கொடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்

விசில் அடிக்கலாம், நாட்டை கொடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Oppo Find X9 Ultra ஸ்மார்ட்ஃபோன் முன்பதிவு தொடக்கம்

1
11 mins agoshare
Oppo போன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved