news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews தாம் உண்மையிலேயே அதிர்ஷ்டமாக உணர்கிறேன் - ரிக்கி பாண்டிங்
tv

Also Watch

tv

Read this

தாம் உண்மையிலேயே அதிர்ஷ்டமாக உணர்கிறேன் - ரிக்கி பாண்டிங்

Ricky Ponting

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விளையாட்டு செய்திகள்

ஐஎஸ்எல்: பெங்களூரு - ஈஸ்ட் பெங்கால் ஆட்டம் டிரா :

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நேற்றை லீக் போட்டி டிராவில் முடிந்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. - ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்திருந்தன. இதனால் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

சென்னை அணி வீரர் கலீல் அகமது விலகல் :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். தற்போது தான் அணியின் காம்பினேஷன் ஒர்க்அவுட் ஆகி தொடர்ச்சியாக 2 வெற்றிகளை பதிவு செய்த நிலையில், கலீல் அகமது விலகியிருப்பது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

தாம் உண்மையிலேயே அதிர்ஷ்டமாக உணர்கிறேன் - ரிக்கி பாண்டிங் :

ஷ்ரேயாஸ் ஐயரைப் போன்ற ஒரு கேப்டனுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை தாம் உண்மையிலேயே அதிர்ஷ்டமாக உணர்வதாக பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அவர் கேப்டன் பொறுப்பையும் பேட்டிங்கையும் கையாளும் விதம் தன்னை வெகுவாகக் கவர்ந்துள்ளதாக ரிக்கி பாண்டிங் கூறினார்.

ஷ்ரேயாஸை இந்திய அணியின் கேப்டனாக நியமியுங்கள் :

ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய அணியின் கேப்டனாக நியமித்து, அவருக்கு அணியில் ஒரு நிரந்தர இடத்தையும் வழங்க வேண்டும் என ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் BCCI-க்கு கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய சூழலில் இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும், அதே சமயம் ஒரு தலைசிறந்த T20 பேட்ஸ்மேனாகவும் ஷ்ரேயாஸ் ஐயர் திகழ்வதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

மும்பை அணி ஹோம் கிரவுண்டில் பஞ்சாப் அணி ஆதிக்கம் :

ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணியை அதன் சொந்த மைதானத்திலேயே 6 முறை வீழ்த்தி பஞ்சாப் அணி ஆதிக்கம் செல்லுத்தி வருகிறது. இந்த பட்டியலில் சென்னை-பெங்களூரு அணி மும்பை அணியை தலா 5 முறை அதன் சொந்த மைதானத்திலேயே வீழ்த்தியுள்ளன.

பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தடுத்த காட்சி :

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டிய பவுண்ட்ரி நோக்கி அடித்த பந்தை பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தடுத்த காட்சி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஷ்ரேயஸ் ஐயரின் ஃபில்டிங்கை பார்த்து மும்பை அணியின் டகவுட்டில் அமர்ந்திருந்த ரோகித் ஷர்மாக, சூர்யகுமார் யாதவ் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மும்பை அணியை 7 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தியது  :

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றிப்பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ரன்களுக்கு 195 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 17 ஆவது ஓவரின் 3ஆவது பந்துலேயே இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

Related Link
பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவை நெருங்கும் விசிக, கம்யூ? பழைய வீடியோக்களால் சிக்கல்

0
7 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved