news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காவிரி நீரை பெற்றுத் தராத தமிழக அரசுக்கு கண்டனம்
tv

Also Watch

tv

Read this

காவிரி நீரை பெற்றுத் தராத தமிழக அரசுக்கு கண்டனம்

விவசாயிகள் போராட்டம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தமிழக அரசுக்கு கண்டனம்

திருவாரூர்  அருகே விளமல் பகுதியில் உள்ள ஓடம்போக்கி ஆற்றில் தமிழ்நாடு விவசாயிகளின் கூட்டியக்கம் சார்பில் காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்தும், தண்ணீரைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும், ஓடம் போக்கி ஆற்றின் கதவணைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் அஞ்சலி செலுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மத்திய, மாநில மற்றும் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டியக்க தலைவர் காவிரி தனபாலன் கூறும் போது..தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவேரி மேலாண்மை ஆணையம் பலமுறை கூறியும், ஒருமுறை கூட கர்நாடகம் உரிய நீரை தமிழகத்திற்கு திறந்து விடவில்லை.

இந்த சூழலில் இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தண்ணீர் திறப்பு என்பது வெறும் பேச்சு அளவில் மட்டுமே இருக்கும்.கர்நாடகம் இதுவரைக்கும் ஒரு முறை கூட காவிரி மேலாண்மை ஆணையத்தின் படி நடக்காததால் காவிரி மேலாண்மை ஆணையம் ஒரு பல் இல்லாத ஆணையமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டும் இதுவரை திறந்து விடாத கர்நாடகா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன..? காவிரி மேலாண்மை ஆணையத்தின் பேச்சை ஒரு முறை கூட மதிக்காத கர்நாடகா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் உங்களிடம் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஐந்து லட்சம் அளவிற்கு தற்போது இல்லாமல் போய்விட்டது. இந்த ஐந்து லட்சம் சிறு குறு விவசாயிகள் இவர்களை நம்பி இருக்கக்கூடிய 14 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்று பாதிக்கப்பட்டிருக்கிறது.கிட்டத்தட்ட 15 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.விவசாயம் இல்லாததால் விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் விவசாயத்தை விட்டு புலம் பெயர்ந்து மாற்று தொழிலுக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

பல் இல்லாத காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைத்துவிட்டு நடுவர் மன்றத்தை உருவாக்க வேண்டும்.ஆணையத்தின் உத்தரவுப்படி ஒரு முறை கூட கர்நாடகம் தண்ணீரை திறக்காத காரணத்தினால் கர்நாடகா அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடகம் தண்ணீரை தராததால் தமிழக விவசாயிகள் ஒரு லட்சம் கோடி இழப்பை சந்தித்திருக்கிறோம். இந்த இழப்பை கர்நாடகம் கொடுக்க வேண்டும் என்பதை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்.

Related Link
நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் எச்சரிக்கை

நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் எச்சரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பழனியை போன்று காரைக்குடியிலும் கோவில் நில மோசடி

0
38 mins agoshare
கோவில் நில மோசடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau