news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தன்னை பார்க்க குட்டி ரசிகர்கள் வர முடியாததால் வருத்தப்படும் CM விஜய்
tv

Also Watch

tv

Read this

தன்னை பார்க்க குட்டி ரசிகர்கள் வர முடியாததால் வருத்தப்படும் CM விஜய்

H.வினோத் உருக்கம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜனநாயகன்

குட்டி ரசிகர்கள் வர முடியாததால் வருத்தப்படும் CM விஜய்

ஜனநாயகன்
காலதாமதமா ரிலீசாகுறதப் பத்தி இயக்குநர் ஹெச்.வினோத் உருக்கமா பேசி இருக்காரு. அதுல, ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் கிடச்சி இருக்கறது எங்களையும் தாண்டி முதலமைச்சர் விஜய்க்கு ரொம்பவே வருத்தம். அவர் படத்துக்கு குழந்தைகளின் ஆதரவு அதிகமாகவே இருக்கும். இந்த படத்துக்கு முதலமைச்சர் விஜயின், குட்டி ரசிகர்கள் வர முடியாதது அவருக்கு வருத்தத்தை தந்திருக்கறதா சொல்லியிருக்காரு.

ஜனநாயகன் படத்துல இப்படியா - Sorry பூஜா ஹெக்டே


ஜனநாயகன் படத்துல பூஜா ஹெக்டேவின் ரோல் குறைந்த காட்சிகளில் மட்டுமே இருக்கும் தகவல் அவரது ரசிகர்களை அப்செட்டாக்கி இருக்கு. ஜனநாயகன் படம் பத்தி பேசி இருந்த ஹெச். வினோத், படத்துல பூஜா ஹெக்டே பத்திரிகையாளராக தேவைப்படும் காட்சிகளில் மட்டுமே வருவார்ன்னு சொல்லி இருக்காரு.

மேலும் ஷூட்டிங்கில் பூஜா ஹெக்டேவின் காட்சிகள் அதிகம் எடுத்ததாகவும், ஆனால் படத்தின் ரன்னிங் டைம் குறைக்கப்பட்டதால பூஜா ஹெக்டேவின் காட்சிகளை கடைசி எடிட் கட்டில் குறைத்ததால் அவரிடம் மன்னிப்பு கேட்பதாகவும் சொல்லி இருக்காரு. பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே, விஜய் காம்போ சக்சஸ் ஆன நிலையில ஜனநாயகன் படத்துல அது மிஸ் ஆகுமோன்னு விமர்சிக்கப்படுது.

ஜனநாயகனில் ஸ்பெஷல் மாண்டேஜ் 


ஜனநாயகன் படத்துல, சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் நடிச்சு இருக்காங்க. இந்த படம் விஜய்க்கு முக்கியமான படமா இருக்கறதால படத்தின் ஓப்பனிங்கில் ஸ்பெஷல் அனிமேஷன் அல்லது ஸ்பெஷல் மாண்டேஜ் மூலம் முதலமைச்சர் விஜய் என Name card போட படக்குழு முடிவெடுத்து இருக்காங்களாம்.

சென்சார் பிரச்சனைக்கு பிறகு ஜனநாயகனில் சில மாற்றங்களை செய்திருப்பதாக படக்குழு தரப்புலயும் சொன்ன நிலையில், அதுல முதலமைச்சர் விஜயின் பெயரும் ஸ்பெஷலாக இடம் பெற்றிருக்கலாம்னு யூகிக்கப்படுது. அப்படி படத்தின் ஓப்பனிங்கில் முதலமைச்சர் விஜய் என்ற Name card போட்டால் அது விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும்ன்னே சொல்லலாம்.

Related Link
ரஜினியை ஓவர்டேக் செய்வாரா முதல்வர் விஜய்..?

ரஜினியை ஓவர்டேக் செய்வாரா முதல்வர் விஜய்..?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் எச்சரிக்கை

0
1 min agoshare
அமைச்சர் எச்சரிக்கை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau