news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews தாக்குதல் நடத்திய ரஷ்யாவுக்கு இந்தியா கடும் கண்டனம்
tv

Also Watch

tv

Read this

தாக்குதல் நடத்திய ரஷ்யாவுக்கு இந்தியா கடும் கண்டனம்

ஏற்றுக் கொள்ள முடியாதவை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia attack

வணிக கப்பல் மீதான தாக்குதலில் 4 மாலுமிகள் உயிரிழப்பு 

உக்ரைன் துறைமுகத்தில் வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரத்தில், ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்தியாவுக்கான ரஷ்ய தூதரக பொறுப்பாளர் விளாடிமிர் டேலனவ்-க்கு மத்திய அரசு சம்மன் அனுப்பிய நிலையில், அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நேரில் ஆஜரானார்.

அப்போது அவரிடம், இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வணிகக் கப்பல்களை குறிவைப்பதும், அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை எனவும், நிச்சயம் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு 

சிக்கிம்மில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய மேலும் 5 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நாம்சி மாவட்டம் ஜோலுங்கே என்கிற இடத்தில் நீர்மின் திட்டத்துக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில், பாறைகள் சரிந்து விழுந்து சுரங்கப்பாதையின் நுழைவுவாயிலை மூடியதால் தொழிலாளர்கள் அனைவரும் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

அசாமில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு 

அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் 16 மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் பேர் பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய ஆறுகள் ஆபத்தான அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முகத்தில் பிளாஸ்டிக் டேப் சுற்றி மனைவி, 2 மகள்கள் கொலை

கர்நாடகாவில் மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்து விட்டு, கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மைசூரு மாவட்டம் ஹன்சூர் நகரில் உள்ள நியூ மாருதி லே அவுட் பகுதியில் ஹரிஷ், தனது மனைவி நிச்சிதா, மகள்கள் நெக்ஸா, ரக்ஷா ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்த சூழலில், மனைவி மற்றும் மகள்களின் முகத்தில் பிளாஸ்டிக் டேப் மற்றும் கவர்களை சுற்றி ஒட்டி மூச்சுத்திணறல் ஏற்படுத்தி கொலை செய்த ஹரிஷ், வீட்டின் மேல்தளத்தில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கா காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related Link
டெங்கு தடுப்பூசிக்கு DCGI அனுமதி

டெங்கு தடுப்பூசிக்கு DCGI அனுமதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பழனி கோயில் நில பத்திரப்பதிவு முறைகேடு விவகாரம்

0
3 mins agoshare
சிபிசிஐடி போலீசார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau