Also Watch
Read this
By: Manigandan Raja

செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கி கட்சி நடவடிக்கை
போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்டுக் கொண்டும், விமர்சிப்பவர்களை கேலி, கிண்டல் செய்துகொண்டும் இருந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
செய்தித் தொடர்பாளராக இருந்த விஜேதா தஹியா, கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றபோது, அப்பேரணியில் பங்கேற்காமல் பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதால் கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சூழலில், பசித்தால் யாராக இருந்தாலும் சாப்பிடத்தான் செய்வார்கள் எனவும், போராட்டக்காரராக இருப்பது மட்டும்தான் எனது வேலையா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
கைது செய்யப்பட்ட ராகுல் காந்தியின் மூக்கில் இருந்து ரத்தம்

டெல்லியில் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட ராகுல் காந்தியின் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி, இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பிரதமர் இல்லத்தை முற்றுகையிட பேரணி செல்ல முயன்றதால் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். போலீஸார் வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக வாகனங்களில் ஏற்றியபோது, ராகுல் காந்தியின் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது.