news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் எச்சரிக்கை

பள்ளிபாளையம், நாமக்கல்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அமைச்சர் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலை லட்சுமி திருமண மண்டபத்தில், பல்வேறு துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், பால்வளத்துறை அமைச்சருமான விஜயலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்க விழா மற்றும் புதிய பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். அப்பொழுது ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி பள்ளியில் முறையான வசதிகள் இல்லாமல் எலி தொல்லைகள் அதிகமாக இருப்பதாகவும், வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி பள்ளி இயங்கி வருவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் அமைச்சரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட அங்கன்வாடி பள்ளிக்குச் சென்ற பால்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் இதற்கு உரிய தீர்வு காணப்படும் எனவும், புதிய கட்டிடத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கிருந்த மூதாட்டி ஒருவர் தங்களுக்கு காவிரி ஆற்று நீர் முறையாக வருவதில்லை எனவும் அப்படியே வந்தாலும் பூச்சி புழுக்கள் நிறைந்து சுகாதாரமற்ற நிலையில் வருவதாக மூதாட்டி ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார் .

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அமைச்சர் விஜயலட்சுமி வட்டார வளர்ச்சி அலுவலர் அழைத்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து அன்னை சத்யா நகர் பகுதியில் அவர் சென்ற பொழுது கழிப்பிடம் முறையாக செயல்படாததால் அது சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்து வருவதாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அங்கு இருந்த பெண்மணி ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலே உள்ளூரை சேர்ந்தவர்களே மது அருந்துகின்றனர் . மிகவும் அச்சமாக இருப்பதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவும் பதற்றத்துடன் கூறினார்.

ஒவ்வொரு பிரச்சனைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் படிப்படியாக உரிய தீர்வுகள் எட்டப்படும் எனவும் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி பொதுமக்களிடம் தெரிவித்தார் "இது கடந்த ஆட்சி மாதிரி இல்லை.. தரமற்ற கட்டுமானம் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" – ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் விஜயலட்சுமி எச்சரிக்கை

தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் புதிய நீர் தேக்க தொட்டிய அமைக்கும் விழாவில் ஒப்பந்ததாரிடம் இது கடந்த ஆட்சி மாதிரி இல்லை கட்டுமான பொருட்களின் தரத்தில் எவ்வித சமரசமும் இருக்கக்கூடாது தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டாலோ விதிமுறைகள் மீறப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Link
த.வெ.க. அரசை கண்டித்து ஜூலை 25 அன்று ஆர்ப்பாட்டம்

த.வெ.க. அரசை கண்டித்து ஜூலை 25 அன்று ஆர்ப்பாட்டம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணைக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தி போராட்டம்

0
3 mins agoshare
அஞ்சலி செலுத்தி போராட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau