தாயை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டதாக நண்பனுக்கு வாட்ஸ் அப்பில் மெஸேஜ் அனுப்பிய இளைஞன். மெஸேஜை பார்த்ததும் நடுநடுங்கி போன நண்பன். கொலை நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ். கொலையை செய்துவிட்டு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அறையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன். தாயை கழுத்தை அறுத்துக் கொலை செய்தது ஏன்? பின்னணி என்ன?நண்பனுக்கு வாட்ஸ் அப்பில் வந்த அதிர்ச்சி மெஸேஜ் நைட்டு நேரம், இளைஞன் ப்ரான்வெல் வீட்ல உட்காந்து ஃபோன் யூஸ் பண்ணிட்டு இருந்துருக்காரு. அப்ப அவரோட நம்பருக்கு வாட்ஸ்அப்ல ஒரு மெஸேஜ் வந்துருக்கு. அதுல நிகில் பிரிட்டோ-ங்குற நபர், நான் என் தாய கத்தியால கழுத்த அறுத்துக் கொன்னுட்டேன்னு மெஸேஜ் பண்ணிருந்துருக்கான். இதபாத்து பதறிப்போன ப்ரான்வெல், உடனே பக்கத்துல உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்ட்டு நடந்த சம்பவம் குறித்து புகார் அளிச்சிருக்காரு. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் கொலையாளியோட வீட்டுக்கு கதவ தொறந்து உள்ள போய்ருக்காங்க. அப்ப நடுவீட்ல தாய் ஆக்ஸிலா ரத்தவெள்ளத்துல உயிரிழந்து கிடந்துருக்காங்க. இதபாத்த போலீஸ் உடனே அந்த சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து வீட்டுக்குள்ள வேறயாராவது இருக்காங்களான்னு தேடி பாத்துருக்காங்க போலீஸ். அப்ப அங்கருந்த மற்றொரு ரூம்ல மகன் நிகில் படுத்து தூங்கிட்டு இருந்துருக்கான். அவன தட்டி எழுப்பிய போலீஸ் அவர நேரா ஸ்டேஷன் கூப்டு போய் விசாரிச்சுருக்காங்க.மதுபோதைக்கு அடிமையான நிகில் பிரிட்டோசென்னை, முகப்பேர் பகுதிய சேந்த பிரிட்டோ - ஆக்ஸிலா தம்பதியின் 28 வயசு மகன் நிகில் பிரிட்டோ. பிடெக் பட்டதாரியான இவன், பெங்களூருவுல உள்ள ஒரு ஐடி கம்பெனியில வேலை பாத்துட்டு இருந்துருக்கான். கை நிறைய சம்பளம் வாங்கிய நிகில் பிரிட்டோ, மாசம் மாசம் பெற்றோருக்கு சம்பள பணத்த அனுப்பி வச்சுருக்கான். இதுக்கிடையில வேண்டாத சேர்க்கையால மதுபோதைக்கு அடிமையான நிகில் சரியா வேலைக்கு போகாம ஊதாரியா ஊர் சுத்திட்டு இருந்துருக்கான். அதுக்கடுத்து அந்த வேலைய உதறித் தள்ளிய நிகில், தாய் கூடவே வந்து வசிக்க ஆரம்பிச்சுருக்கான். இங்க வந்ததுக்கு அப்புறமும் எந்த ஒரு வேலைக்கும் போகாம, வீடே கதின்னு கிடந்துருக்கான். இதனால தாய் மகனுக்கு இடையில அடிக்கடி பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. Related Link தடுக்க சென்ற மீனாவுக்கு நடந்த கொடூரம் ஆன்லைன் கேமில் ரூ.15 லட்சத்தை செலவழித்த நிகில்இதுக்கிடையில ஆன்லைன்ல கேம் விளையாட பழகிருக்கான் நிகில். அடுத்து ப்ரண்ட்ஸ் உறவினர்கள்ன்னு எல்லார் கிட்டயும் கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கிய இளைஞன் அத ஆன்லைன் கேம்ல போட்டுருக்கான். அதுக்கப்புறம் வாங்குன கடனையும் நிகில் யாருக்கும் திருப்பி கொடுக்கவே இல்லை. இதனால கடன் காரங்க எல்லாரும் வீட்டுக்கு போய்ட்டு கொடுத்த காச திருப்பி கேட்ருக்காங்க. கடன் வாங்கி 3 மாசம் ஆகுது, இப்ப வர வட்டிக் காச தரல, ஃபோன் பண்ணாலும் எடுக்கல, எப்ப எங்க பணம் கிடைக்கும்ன்னு கேட்ருக்காங்க. அதுக்கு நிகில், என்கிட்ட இப்போதைக்கு காசு இல்லை இருக்கும் போது தரேன்னு அலட்சியமா சொல்லிருக்கான். இதனால கோபமான கடன் காரங்க என் பணத்த கொடுக்கலனா உன் மேல போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் கொடுத்துருவேன்னு மிரட்டிருக்காங்க.மதுகுடித்துவிட்டு பிரச்னை செய்து வந்த நிகில் பிரிட்டோஇவ்ளோ பிரச்னைக்கு அப்புறமும் நிகில் பிரிட்டோ வேலைக்கு போகாம மது குடிச்சுட்டு அக்கிரமம் பண்ணிட்டு இருந்துருக்கான். அதே மாதிரி வாடகை பணத்தையும் 4 மாசமா கொடுக்கலன்னு கூறப்படுது. இதனால வீட்டு உரிமையாளர், அவங்கள வீட்ட காலி பண்ண சொல்லிருக்காங்க. இதனால மகன் மேல ஆத்திரமடைஞ்ச தாய், எதுக்கு எந்த ஒரு வேலைக்கும் போகாம, இப்படி குடிச்சே எல்லாத்தையும் அழிக்குற, உன்னால என் மானமே போகுது, கடன்காரங்க எல்லாரும் பணத்த கேட்டு அசிங்கப்படுத்துறாங்க, உன்னால இந்த வீட்டுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லன்னு சொல்லி திட்டிருக்காங்க. இத கேட்ட மகன் தன்னோட தாயவும் பதிலுக்கு தகாத வார்த்தையால திட்டிருக்கான்.நிகில் பிரிட்டோவை கைது செய்து போலீசார் விசாரணைசம்பவத்தன்னைக்கு நைட்டு மறுபடியும் நிகில் ஃபுல் போதையில வீட்டுக்கு வந்துருக்கான். அப்ப மறுபடியும் தாய் மகனுக்கு இடையில பயங்கர பிரச்னை ஏற்பட்டிருக்கு. நிகில் பிரிட்டோவ தாய் ஆக்ஸிலா திட்டுனதா கூறப்படுது. இதனால கோபத்தோட உச்சத்துக்கே போன மகன், வீட்ல இருந்த கத்திய வச்சு தாய பலமுறை கத்தியால குத்திருக்கான். அடுத்து தாய கழுத்தறுத்து கொடூரமா கொலை செஞ்ச நிகில், தன்னோட ப்ரண்ட் ஒருத்தருக்கு தாய கழுத்தறுத்து கொலை செஞ்சுட்டதா வாட்ஸ் அப்ல மெஸேஜ் அனுப்பி வச்சுட்டு தன்னோட அறையில போய் தூங்கிட்டான். நண்பரோட புகார் அடிப்படையில ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், வீட்ல தூங்கிட்டு இருந்த நிகில் பிரிட்டோவ அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. Related Link போலீஸை திசை திருப்ப பலே பிளான்