Also Watch
Read this
By: Manigandan Raja
பக்கத்து வீட்டிலிருந்து கேட்ட பெண்களின் அலறல் சத்தம். ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பெண்கள். மாமியாரை கொடூரமாக வெட்டிச் சாய்த்த மருமகன். தடுக்க சென்ற மனைவியையும் அரிவாளால் வெட்டி வெறி தீர்த்த பயங்கரம். மருமகனின் கொலைவெறிக்கு என்ன காரணம்? கொலையின் பின்னணி என்ன?

உயிருக்கு போராடி கொண்டிருந்த மகள் மீனா
எப்பவுமே ஆள் நடமாட்டம் அதிகமா இருக்குற திருவெண்ணெய்நல்லூர் பாவந்தூர்ல உள்ள வீட்ல இருந்து ஒரு பெண்ணோட அலறல் சத்தம் கேட்டுருக்கு. பக்கத்து வீட்டுக்காரங்களும், ரோட்ல போறவங்களும் என்ன ஏதுன்னு அந்த வீட்டையே உத்து பாத்துட்டு இருக்கும்போது, கைல அரிவாளோட ஒருத்தன் வேக வேகமா வீட்டுல இருந்து வெளியேறி ஓடிருக்கான். உடனே போலீஸுக்கு தகவல் போயிருக்கு. ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், சவுண்டு கேட்ட வீட்டுக்குள்ள போய் பாத்துருக்காங்க. அங்க, முகம், கை, கால்ன்னு உடம்புல எல்லா இடத்துலயும் வெட்டு பட்டு ரத்த வெள்ளத்துல இறந்து கிடந்திருக்காங்க, தனலட்சுமி. பக்கத்துலே மகள் மீனா உயிருக்கு போராடிட்டு இருந்துருக்காங்க.

6 ஆண்டுகளுக்கு முன் நடந்த சிவா - மீனா திருமணம்
உடனே அவங்கள மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்ச போலீஸ், தனலட்சுமி சடலத்த போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அதுக்கப்புறம், என்ன நடந்துச்சு. யாரு கொலை பன்னதுன்னு விசாரணைல இறங்குனாங்க போலீஸ். கொல்லப்பட்ட தனலட்சிமியோட மகள் மீனாவுக்கும், அதே பகுதிய சேர்ந்த சிவாவுக்கும் கடந்த 6 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்திருக்கு. கல்யாணம் நடந்த கொஞ்ச நாள்லேயே கணவன் - மனைவிக்குள்ள மனஸ்தாபம் ஏற்பட்டுருக்கு. இந்த மனஸ்தாபம், போலீஸ் ஸ்டேஷனுக்கு போற அளவுக்கு அதிகமாகியிருக்கு.

மாமியார் தனலட்சுமிக்கும், மருமகன் சிவாவுக்கும் தகராறு
இந்த மாதிரி பிரச்னைனால சிவாவும், மீனாவும் பிரிஞ்சு வாழ்ந்து வந்துருக்காங்க. இதுக்கு நடுவுல, விவாகரத்து கேட்டு மீனா கோர்ட்ல கேஸ் கொடுத்திருக்குறதாவும் சொல்லப்படுது. என்ன தான் பிரச்னைனாலும், என்ன தான் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், கேஸ்னு பிரச்சினை போனாலும், மீனா கூட சேந்து வாழனும்ங்குற எண்ணம், சிவாவுக்கு இருந்துருக்கு. மனைவிய சமாதானப்படுத்துறதுக்கு எடுத்த முயற்சி எல்லாம் தோல்விலயும் முடிஞ்சிருக்கு. மனைவிகிட்ட சிவா பேச முயற்சிக்கும்போதெல்லாம் மாமியார் தனலட்சுமி கூட சிவாவுக்கு தகராறு ஏற்பட்டுருக்கு. ஒருகட்டத்துல, தனக்கும், மனைவிக்கும் இடைல வரக்கூடிய எல்லா பிரச்சினைக்கும் மாமியார் தனலட்சுமி தான் காரணம்னு சிவாவுக்கு தோணிருக்கு. மீனாவ சேந்து வாழ விடாம தடுக்குறதுல இருந்து தன்னோட வாழ்க்க இப்படி அந்தரத்துல தொங்குறதுக்கும் அவங்க தான் காரணம்னு நினைச்சு அவங்க மேல செம கோவம் வந்துருக்கு. அந்த கோவம் நாளாக நாளாக கொலைவெறியா மாறியிருக்கு.

மருமகனிடம் நியாயம் கேட்பதற்காக சென்ற மீனா
இந்த சூழல, மீனா மனசு மாறி தன்னோட கணவன்கூட வாழ்றதுக்கு வந்துட்டாங்க. மனைவி வந்த ஒருவாரம் சைலண்ட்டா இருந்த சிவா மதுபோதையில வீட்டுக்கு வந்து மீனாக்கிட்ட மறுபடியும் தகராறு பண்ண ஆரம்பிச்சிருக்கான். இந்த விஷயத்த தாய் தனலட்சுமிக்கிட்ட மீனா சொல்லவே, அவங்க நியாயம் கேக்குறதுக்காக மகள் வீட்டுக்கு வந்துருக்காங்க. போதையில இருந்த சிவா மாமியாருன்னு கூட பாக்காம அவங்கள தகாத வார்த்தைகளால பேசிருக்கான். திடீர்னு அரிவாளால தனலட்சுமிய சரமாரியாக வெட்டி சாச்சிருக்கான் முகம், கை,கால்னு எல்லா இடத்துலயும் வெட்டுபட்டு ரத்தம் கொட்டியிருக்கு. பெத்த தாய கணவன் வெட்டுனத பாத்து துடிதுடிச்சு போன மீனா அத தடுக்க போயிருக்காங்க. அப்ப, மனைவியையும் வெட்டிட்டு அங்க இருந்து தப்பிச்சு போயிருக்கான்.

மனைவி மீனாவிடம் காவல்துறையினர் விசாரணை
கொலையாளி சிவாவ வலைவீசி தேடிட்டு வரும் போலீஸ், அவரோட செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணிருக்காங்க. அதுல, அவனோட செல்போன் கடைசியா, கொலை நடந்த வீட்ல வச்சுதான் ஆன்ல இருந்துருக்கு. அதுக்கப்புறம்ம் ஃபோன் ஸ்விட்ச் ஆப்லயே தான் இருக்குது. தப்பி ஓடுனவன போலீஸ் தீவிரமா தேடிட்டு வர்றாங்க. அதோட சிகிச்சைல உள்ள மனைவி மீனாக்கிட்டவும் காவலர்கள் விசாரணை நடத்திட்டு இருக்காங்க. எல்லோரும் ஒன்னா உட்காந்து கொஞ்ச நேரம் பேசுனா எவ்வளவு பெரிய பிரச்சினையா இருந்தாலும் சரியாகிரும். அத விட்டுட்டு, அவசரமும், ஆத்திரமும்தான் இந்த மாதிரி கொடூர சம்பவங்கள் நடக்குறதுக்கு காரணம்னு சொல்றாங்க காவல்துறையினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved