திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடைபெற்ற ஞானவேல் முருகன் ரத யாத்திரையில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புத்தாநத்தம் அருகே உள்ள பாறைப்பட்டி, மாலைக்காட்டுப்பட்டி பிரிவு சாலையில் இருந்து புறப்பட்ட ரதம், செண்டை மேளம், பறையாட்டம், கிராமிய நடனம், வாண வேடிக்கை என ஊர்வலமாக சென்று ஞானமலையை அடைந்தது. அங்கு பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி முருகனை தரிசித்தனர்.