திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் இருந்து ஃபிரிட்ஜ் திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில், விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் அணைத்தனர். வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறிய நிலையில், அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சென்று அணைத்தனர்.