சபரிமலை சீசன், வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வருகை தந்திருந்தனர். ரோப் கார் சேவை ,மின் இழுவை ரயில் வழியாக மலைக் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர்.