Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மின்சார ஒயரை மாற்றி அமைப்பதற்கு லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கோவில்பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த சாமுவேல், தனது வீட்டின் முன்பு ஆபத்தான முறையில் செல்லும் மின்சார ஒயரை மாற்றி அமைக்குமாறு கூடல் நகர் துணை மின்வாரியத்தில் புகாரளித்தார்.
அதற்கு போர்மேன் கணேசன், 5000 ரூபாய் லஞ்சம் கேட்கவே லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்களது அறிவுறுத்தல்படி சாமுவேல் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வாங்கிய கணேசன் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.
இதையும் படியுங்கள் : பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீவிபத்து பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved