Also Watch
Read this
By: Manigandan Raja

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி, சூளகிரி, ஒசூர், வேப்பனப்பள்ளி, மகாராஜகடை, பர்கூர், காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்த நிலையிலும் மாலை 6 மணிக்கு மேல் மாவட்டத்தில் பெருமான்மையான பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இரவு நேரங்களில்
குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
இந்த நிலையில் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கேஆர்பி அணைக்கு நீர்வரத்து
வினாடிக்கு 12 கன அடி இருந்த நிலையில் படிபடியாக நீர்வரத்து அதிகரித்தது.

இன்றைய நிலவரப்படி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 967 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரம் 52 அடிக்கு நீர் இருப்பு 50.20 அடியை எட்டியதால் அணையின்
பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 783 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு தொடர்ந்து 8 வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் மேலும் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved