Also Watch
Read this
By: Manigandan Raja

டாஸ்மாக் கடை :
கன்னியாகுமரி மாவட்டம் தெருகடை பகுதியில் தேவாலயங்கள் கோயில் பள்ளி மற்றும் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற இந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு 717 டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் இந்த டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்காத தை கண்டித்து இந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால்.

கலைந்து சென்றனர் ஆனால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தை துவங்கினர் இரவிலும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது
குறுகலான இந்த டாஸ்மாக் கடையால் பல விபத்துகள் ஏற்படுவதோடு போக்குவரத்து நெரிசல் மற்றும் அறை குறை ஆடைகளோடு பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும்
பெண்களிடம் மது பிரியர்கள் அத்து மீறல்களில் ஈடுபடுவதால் நிரந்தரமாக இந்த டாஸ்மாக் கடையை மூடும் வரை தொடர்ந்து போராட்டம்.
நடத்த போவதாக இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் மேலும் இந்த போராட்டத்திற்கு பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved