Also Watch
Read this
By: Manigandan Raja

"நீட் மறுதேர்விலும் வினாத்தாள் கசிந்தால்..." :
நீட் மறுதேர்விலும் வினாத்தாள் கசிந்தால் பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வை பிரதமர் நேரில் கண்காணித்து வருவதாக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளதால், அவர் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மறுதேர்வு முறையாக நடத்தப்படும் என்று தாங்கள் நம்புவதாக கூறினார்.
இந்தியா கூட்டணி தலைவர்கள் வரும் 8-ம் தேதி சந்திப்பு :
இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் வரும் 8-ம் தேதி டெல்லியில் சந்திக்கின்றனர். இந்த கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் , சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொள்கின்றன.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தற்போது தவெகவில் இணைந்துள்ளதால், அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய்யை அழைக்க முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மம்தா கூட்டத்தை புறக்கணித்த 60 எம்.எல்.ஏக்கள் :

மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டத்தை எம்எல்ஏக்கள் புறக்கணித்ததால் கூட்டம் ரத்துசெய்யப்பட்டது.
அடுத்தடுத்து கட்சியின் எம்.பிக்கள் தாக்கப்பட்ட விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை மம்தா பேனர்ஜி கூட்டியிருந்த நிலையில் மொத்தமுள்ள 80 எம்.எல்.ஏக்களில் 20 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் நீக்கம் :

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேரை அதிரடியாக நீக்கி கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் தேர்வில் போலி கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சந்திபன் சாஹா, ரிதாப்ரதா பானர்ஜி ஆகியோர் முதல்வர் சுவேந்து அதிகாரியை சந்தித்து புகார் தெரிவித்ததால் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான நடவடிக்கை :
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்கும் மியான்மர் மண்ணில் அனுமதி அளிக்க மாட்டோம் என அந்நாட்டின் அதிபர் உ மின் ஆங் லைன், பிரதமர் மோடியிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.
5 நாள் அரசு முறை பயணமாக டெல்லி வந்தடைந்த அவர், பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது இவ்வாறு கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved