news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிகாரிகள் ஒத்துழைப்போடு கிராவல் மண் சுரண்டல்
tv

Also Watch

அதிகாரிகள் ஒத்துழைப்போடு கிராவல் மண் சுரண்டல்

கூடுதலாக எடுக்கப்படும் மண்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கிராவல் மண் சுரண்டல்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேகார அள்ளி பகுதியில் அமைந்துள்ள தாமரை ஏரி சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியை சுற்றி சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற்று வந்தன.

இந்த நிலையில் கரகதஹள்ளி பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராஜா என்பவர் வண்டல் மண் எடுக்க பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து வண்டல் மண் எடுக்க கனிமவளத்துறை மற்றும் வருவாய் துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.

தொடர்ந்து இரவு பகலாக வண்டல் மண் எடுப்பதற்கு பதிலாக இராசஷ ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு கிராவல் மண் அதிக அளவு வெட்டி எடுத்துச் செல்லப்படுகிறது. அரசு வழங்கிய அளவைவிட அதிக அளவு ஆழத்தில் கிராவல் மண் எடுத்துச் செல்லப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்படுவது மட்டுமன்றி விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பெருமளவில்
பாதிக்கப்படுகின்றனர்.

அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி முதல் வட்டாட்சியர் வரை உள்ள வருவாய் துறையினர் மற்றும் கனிமவளத்துறையினர் ஆதரவோடு ஒரு சில அரசியல் கட்சியினர் இது போன்ற சட்ட விரோதமாக கனிம வளங்களை கொள்ளையடித்து செல்வதால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

Related Link
கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்து

கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved