news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருவையாறு அருகே விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
tv

Also Watch

திருவையாறு அருகே விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவையாறு, தஞ்சாவூர்

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சை டெல்டாவில் நீரின்றி குறுவை சாகுபடி மூன்று லட்சத்தி 50 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த வைத்தியநாதன் பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.

விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என பதாகைகளை ஏந்தியபடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.


தவெக அரசு தேர்தலின் போது "சிறு, குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, பெரு விவசாயிகளுக்கு 50% தள்ளுபடி" என வாக்குறுதி அளித்தது. ஆனால் மே 24, 2026 அன்று அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே முழு தள்ளுபடி. ரூ.75,000-க்கு மேல் உள்ளவர்களுக்கு வெறும் ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Link
மேம்பால பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மேம்பால பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved