news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை வேண்டும்
tv

Also Watch

+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை வேண்டும்

நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சௌமியா அன்புமணி

பசுமைத்தாயகம் நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மேடவாக்கத்தில் நடைபெற்றது. இதில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவரும்,பாமக சட்டமன்ற உறுப்பினருமான சௌமியா அன்புமணி கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கியும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை சாமான்கள்,அரசு பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, அரசுப் பள்ளிக்கு எக் போர்டுகள், மாணவ மாணவிகளுக்கு தட்டுகள், மாற்றுத்திறனாளிக்கு நாற்காலிகள் வழங்கியும், தூய்மை பணியாளர்களுக்கு அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் சௌமியா அன்புமணி
வழங்கினார்.

பின்னர் மேடையில் பேசிய சௌமியா அன்புமணி:

பல்வேறு விஷயங்களை பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையில் கொண்டு வந்துள்ளோம் தர்மபுரியில் பெரும்பாலான இடங்கள் சாலை வசதிகள் முறையாக இல்லை குண்டும்
குழியுமாக இருப்பதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யவில்லை என நாங்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ள உள்ளோம்

மாற்று திறனாளிகளுக்கு ஏற்ப சுற்றுப்புற சூழலை வடிவமைக்க விட வேண்டும் இதுகுறித்து நிழல் நிதிநிலை அறிக்கையில் கொண்டு வந்துள்ளோம் தூய்மை பணியாளர்களே இல்லையென்றால் சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்காது அவர்கள் இருப்பதினால் தான் பல் பெரும்பாலான பகுதிகள் சுத்தமாக உள்ளது.


தூய்மை பணியாளர்கள் இருப்பதினால் தான் நகரம் நன்றாக உள்ளது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் பள்ளிக்கரணை என்பது இயற்கை வரம் கொடுத்த பகுதி ஆனால் இப்போது பல்வேறு பகுதிகளில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால் மழை பெய்தால் தண்ணீர் தேக்கும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி பேட்டி:

நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கும் எதிரான நுழைவுத் தேர்வாக இருக்கிறது. நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் கூட கல்லூரியில் சேரும் நிலை இருக்கிறது அதில் எந்தவிதமான சம வாய்ப்பு இல்லை.

எம்பிபிஎஸ் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களை போதுமானது ஒரு மாணவர் எத்தனை முறை தான் தன்னுடைய தகுதியை நிரூபிக்க வேண்டும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அவர்கள் நன்கு படித்து மதிப்பண்களை எடுக்கிறார்கள் அந்த மதிப்பெண்களை வைத்து அவர்களை கல்லூரிக்கு சேர அனுமதிக்கலாம்.

மாணவர்கள் மிகவும் பாவம் அவர்கள் படித்துக் கொண்டே இருக்கிறார்கள். டெல்லியில் மாணவர்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள் அவர்கள் மீது அத்துமீறல் தாக்குதல் போன்றவை நடத்தக் கூடாது.

மாணவர்கள் மீது கைது நடவடிக்கைகள் வழக்கு பதிவு செய்வது போன்றவை கூடாது பிறகு மாணவர்கள் வேலைக்கு செல்வது வெளிநாடு செல்வது உள்ளிட்ட அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.


Related Link
திருப்பத்தூர் தவெகவில் உட்கட்சி மோதல், மாவட்ட செயலாளர் மீது  புகார்

திருப்பத்தூர் தவெகவில் உட்கட்சி மோதல், மாவட்ட செயலாளர் மீது புகார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved