Also Watch
Read this
By: Manigandan Raja

காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் ராகுல், பிரியங்கா அஞ்சலி
ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இடமான காந்தி ஸ்மிருதியை நோக்கி பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர், மாணவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர தொடர்ந்து போராட்டத்தைத் தொடர்வதாகவும் உறுதியளித்தனர்.
ராகுல் காந்தியின் இல்லத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை
டெல்லியில் ராகுல் காந்தியின் இல்லத்தில் கூடி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டனர். நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட போராட்ட திட்டம் குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சமாஜ்வாதி, திரிணாமுல் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு

கரப்பான்பூச்சி கட்சியினர் இன்று நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரின் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைய மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளவர்கள், தலைநகரில் மட்டும் நடைபெற்ற போராட்டம் இன்று நாடு தழுவிய அளவில் முன்னெடுக்கப்படுகிறது.