Also Watch
Read this
By: Manigandan Raja

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான இளைஞர்கள் போராட்டம்
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான இளைஞர்களின் போராட்டம் உச்சம்பெற்றுள்ள சூழலில், மத்திய கல்வித்துறை செயலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். உயர்கல்வித்துறை செயலாளராக நரேஷ்பால் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார். இதேப்போல் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக டி.கே.அனில் குமார் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு வழக்குகள்

பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு வழக்குகளை விசாரிப்பதற்கென டெல்லி உயர்நீதிமன்றம் சிறப்பு விரைவு நீதிமன்றத்தை அறிவித்திருக்கிறது. தலைநகரில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக அனு குரோவர் பாலிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்வுத்தாள் கசிவைத் தடுக்க மசோதா
தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருக்கும் பிரதமர் மோடி, மசோதாவை விரைந்து நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதி தந்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved