Also Watch
Read this
By: Manigandan Raja

வசூலில் மரண மாஸ் காட்டிய 'ஜனநாயகன்'
தமிழக முதலமைச்சரும் தமிழக உச்ச நடிகருமான விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' ஜூலை 23-ம் தேதி வெளியாச்சு. என்னதான் படம் ஏற்கனவே இணையத்துல கசிந்திருந்தாலும் முதல் நாள் வசூல்ல மாஸ் காட்டியிருக்குன்னே சொல்லலாம்.
தொழில்துறை கண்காணிப்பு தளமான Sacnilk வெளியிட்டுள்ள தகவல்படி 'ஜனநாயகன்' முதல் நாளில் வசூலாக இந்தியாவில் 50 கோடியே 28 லட்சம் ரூபாயும், வெளிநாடுகளில் 30 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதா தகவல் வெளியாகிருக்கு. இதன்படி, 'ஜனநாயகன்' படம் முதல் நாள் வசூலாக உலகளாவிய அளவுல 80 கோடியே 28 லட்சம் ரூபாய் வசூலிச்சிருக்கு.
பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது 'கான்சிட்டி'

ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிச்சிருக்கற 'கான்சிட்டி' திரைப்படம் கடந்த ஜூன் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாச்சு.
ஏமாற்றாதே, ஏமாறாதே கான்செஃப்ட்ட வெச்சு உருவான இந்தப்படம் ரூபாய் 6 கோடி வரைக்கும் வசூலிச்சிருக்கறதா தகவல்கள் வெளியாகியிருந்துச்சு. இந்த நிலையில், ஜூலை 24-ம் தேதியான இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'கான்சிட்டி' திரைப்படம் வெளியாகிருக்கு.
மாணவர்களுக்கு பிரபல பாலிவுட் நடிகர் வைத்த வேண்டுகோள்

மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என பாலிவுட் நடிகர் சல்மான்கான் வேண்டுகோள் விடுத்திருக்காரு. இது பத்திப்பேசுன அவர், வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி ட்வீட் செய்து உறுதி அளித்ததால்.
மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என தெரிவிச்சிருக்காரு. அதேமாதிரி, நீண்ட நாட்களா போராடிட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தன்னோட உண்ணாவிரதத்தை இன்னைக்கு முடிச்சுகிட்டாருங்கறது கூடுதல் செய்தி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved