news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தீவிபத்து
tv

Also Watch

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தீவிபத்து

பொருட்கள் வெடித்து சிதறியது

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மின்கசிவால் தீ

சேலம்  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் இன்று மதியம் ஏற்பட்ட திடீர் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் நூலகம், வழக்கறிஞர்கள் ஓய்வறை மற்றும் உணவுக் கூடம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரிவுகள் இயங்கி வருகின்றன.

​இந்நிலையில், இன்று மதியம் கட்டிடத்தின் ஒரு பகுதியில் எதிர்பாராதவிதமாக மின் கசிவு (Short Circuit) ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த ஜெராக்ஸ் இயந்திரம் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறி, திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின.


​கட்டிடத்திற்குள் இருந்து அடர்ந்த புகையும் தீப்பிளம்பும் எழுந்ததைக் கண்டு, உள்ளே அமர்ந்திருந்த வழக்கறிஞர்கள் அலறியடித்தபடி அவசர அவசரமாக வெளியே ஓடி வந்தனர். தொடர்ந்து, அங்கிருந்த சிலர் சாதுரியமாக செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த விபத்தில் அங்கிருந்த ஜெராக்ஸ் இயந்திரம் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

​இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும், மின் கசிவு ஏற்பட்டதற்கான மூலக் காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

​பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்திற்குள் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

Related Link
வெறும் 8 நொடி வீடியோ மட்டும் போதுமா? முன்பும், பின்பும் உள்ள வீடியோ எங்கே?

வெறும் 8 நொடி வீடியோ மட்டும் போதுமா? முன்பும், பின்பும் உள்ள வீடியோ எங்கே?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved