Also Watch
Read this
By: Manigandan Raja

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, 69 சாத்தனூரில் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏதுவாக 9 குடிநீர் தொட்டிகள் இருந்து வருகின்றன.
கடந்த ஐந்து மாதத்திற்கு மேலாக சரிவர தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யாமல் சரி வர பராமரிக்காமல் இருப்பதால் சுத்தமான குடிநீர் கிடைக்காத நிலையில் இருந்து வந்ததாகவும், தற்போது ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக கூறி சாத்தனூர் காந்தி சிலை அருகே 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களோடு போராட்டம் மேற்கொண்டனர்.

மேலும் அவர்கள் கூறுகையில் இந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தண்ணீர் சுத்தமாக கிடைக்கவில்லை என்றும், குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரித்து குடிநீர் வழங்க ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், மேலும் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் காலை மாலை என்று இரு வேலைகளிலும் பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்ல எதுவாக பேருந்துகள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
சாத்தனூர் பகுதியில் குடிநீர் கிடைக்காததால் காலி குடங்களோடு பெண்கள் போராட்ட மேற்கொண்ட நிலையில் அவர்களிடம் திருநீலக்குடி போலீசார் மற்றும் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved