news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இறுதிக்கட்ட பிரச்சாரம் - விஜய் ஆவேசம்
tv

Also Watch

tv

Read this

இறுதிக்கட்ட பிரச்சாரம் - விஜய் ஆவேசம்

சிங்கம் எப்போதும் சிங்கம்தான்

18

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுகவை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் கடைசி பிரச்சாரம் எனக்கூறி, தமது பிரச்சாரத்தை தவெக தலைவர் விஜய் நிறைவு செய்தார்.

சென்னையில் விஜய் ரோடு ஷோ
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில், தவெக தலைவர் விஜய் பேசியதாவது;
மிக மிக முக்கியமான நேரத்தில் இருக்கிறோம். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப் போகின்ற தேர்தலின் கடைசிப் பிரசாரம். ஸ்டாலின் சாரை வீட்டுக்கு அனுப்பப் போகின்ற கடைசிப் பிரசாரம். மக்களை கண்டுக்காத ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் கடைசி பிரசாரம்.

கடன் சுமை உயர்வு
பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றி, அவருடைய வாழ்க்கையை உயர்த்தியுள்ளார். வீட்டு வரி, தண்ணீர் வரி, குப்பை வரி, விலைவாசி உயர்வு என மக்கள் பிரச்னைகளை உயர்த்தியுள்ளார். கடன் சுமையையும் உயர்த்தி வைத்துள்ளார்.

சிங்கம் எப்போதும் சிங்கம்தான்
நமது அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்ற நிலையில் இருந்து இதுவரை மாறவில்லை.

தமிழ்நாட்டின் நல்லிணக்கத்தை யாரும் நாசம் செய்ய முடியாது. தவெக நிலைப்பாட்டில் ஒரு இன்ச் கூட மாறவில்லை. மதசார்பற்ற சமூக நீதிக் கொள்கையில் இருந்து மாற மாட்டோம். இந்த விஷயத்தில் 100 சதவிகிதம் விஜய்யை நம்பலாம். எம்மதமும் நம்மதம் என்பதுதான் விஜய்யின் முகம். சிங்கம் எப்போதும் சிங்கம்தான். தனியாக வந்தாலும் தண்ணி காட்டிவிடும்.

நான் அன்றே கூறியது...
சிறுபான்மையினர் வாக்குக்காக கோடிக் கணக்கில் செலவிட்டு காங்கிரஸை வாங்கிக் கொள்ள வேண்டியது. கட்சியைக் காப்பாற்ற பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி. ஒரு பக்கம் கதர் வேடம், மறுபக்கம் காவி வேடம். பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி என நான் அன்றே கூறியதை தற்போது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். இந்த தேர்தலில் திமுக தோற்கப் போவது உறுதி. தேர்தல் தோல்விக்குப் பிறகு திருட்டு வழக்கு, கொள்ளை வழக்கில் இருந்து காப்பாற்றிக் கொள்ள மோடி மற்றும் அமித் ஷா காலில் திமுக விழும்.
இவ்வாறு பேசி, தவெக தலைவர் விஜய் வாக்கு சேகரித்தார்.

Related Link
இறுதி யுத்தம் தொடங்கிவிட்டது - இபிஎஸ் வெளியிட்ட அதிரடி வீடியோ

இறுதி யுத்தம் தொடங்கிவிட்டது - இபிஎஸ் வெளியிட்ட அதிரடி வீடியோ

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வென்றது

4
43 mins agoshare
தவெக அரசு வென்றதுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved