Also Watch
Read this
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளரை ஆதரித்து, பிரச்சாரம் செய்த அன்புமணி ராமதாஸ், திமுகவின் செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட ரகசியத்தை வெளிப்படையாக போட்டுடைத்தார்.

மரக்காணத்தில் 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியான விவகாரத்தில், கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்ததால் தான், செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவியும், மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது என பகீர் கிளப்பினார்.

விழுப்புரத்தில் அன்புமணி...
விழுப்புரத்தில், அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது;
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத திமுகவிற்கு எதற்கு ஆட்சி, பதவி? விட்டு விட்டு செல்லுங்கள்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும். திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனி குருகி உள்ளதாகவும், பட்டியலின மக்கள், கிறிஸ்தவர்கள், வன்னியர்களை வாக்கு வங்கியாக மட்டுமே திமுகவினர் பயன்படுத்துவதாகவும், பட்டியலின மக்களின் வாக்கு மட்டும் தான் வேண்டும்.

வாக்குறுதிகள் என்னாச்சு?
திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றி உள்ளனர். இது, அவர்கள் கொடுத்த வாக்குறுதியில் 13 விழுக்காடு மட்டுமே. அவர்கள் தோல்வி அடைந்து விட்டதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள். எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றவுடன் நெசவாளர்களுக்கு தனி பட்ஜெட் போடுவோம். சமூக நீதியை நிலை நாட்டுவோம். இது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நடைபெறும், எல்லாம் சுயமரியாதையாக வாழ திமுகவை விரட்ட வேண்டும்.

மதுவை ஒழித்தார்களா?
திமுக தேர்தல் அறிக்கையில் மதுவை பற்றியோ, போதை பொருள் தடுப்பு குறித்தோ ஒரு வார்த்தை இடம்பெறவில்லை, தேர்தல் அறிக்கையை தயாரித்த கனிமொழி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது ஒழிப்பினை கொண்டு வருவோம் என சொன்னார்கள்.

ஆனால், அதனை செய்யவில்லை. ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த ஸ்டாலின், இதை செய்தேன் அதை செய்தேன் என கூற முடியாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் கொடுப்பேன் என்கிறார்.
இவ்வாறு பேசி அன்புமணி வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved